நிதியமைச்சின் காரியாலயத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையிலான திட்டங்களை விரைவாக செயற்படுத்தலாம். ஆனால் அரச செலவுகளை ஒரே கட்டத்தில் குறைப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது இலகுவான விடயமல்ல, வரி அதிகரிப்பு நடுத்தர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
நாட்டின் அரச வருமானத்திற்கும், அரச செலவிற்கும் இடையில் பாரிய பற்றாக்குறை காணப்படுகிறது. ஒரு மாத அரச வருமானம் 145 பில்லியன் ரூபாவாக காணப்படுகிறது. ஆனால் ஒரு மாத அரச செலவினம் 157 பில்லியன் ரூபாவாக காணப்படுகிறது.
ஒரு மாதத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க 96 பில்லியனும், ஓய்வூதிய கொடுப்பனவுக்கு 27 பில்லியனும், சமுர்த்தி கொடுப்பனவுக்கு 06 பில்லியன் ரூபாவுடன் நலன்புரி உள்ளடங்களாக ஏனைய செலவுகளுக்கும் நிதி ஒதுக்கலாக மாத அரச செலவினம் 157 பில்லியன் ரூபாவாக காணப்படுகிறது.
வரிகளை அதிகரித்து குறுகிய காலத்திற்கு அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். ஆனால் அரச செலவுகளை கட்டம் கட்டமாகவே குறைக்க முடியும்.
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கும், செலவுகளை குறைப்பதற்கும் விசேட நடவடிக்கை தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளது. கடன் பெறாமல் ஒருமாத தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ளும் நிலையில் நாட்டின் பொருளாதாரம் சீராக இல்லை என தெரிவித்துள்ளார்.
Post a Comment