புதிய முறைமையின் போது புதிய கடவுச்சீட்டைப் பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய முடியும்.
விண்ணப்பதாரர்கள் இதை வீட்டிலேயே செய்யலாம். அவர்கள் கைவிரல் அடையாளத்தைக் கொடுக்க மாத்திரமே திணைக்களத்திற்கு செல்ல வேண்டும். இதற்காக அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி 50 அலுவலகங்கள் அமைக்கப்படவுள்ளது. விண்ணப்பதாரருக்கு அருகில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று கைரேகையைக் கொடுக்க ஒன்லைன் சந்திப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஒன்லைனில் பணம் செலுத்துவதற்கும், கடவுச்சீட்டை வீட்டில் பெற்றுக் கொள்வதற்கும் ஒரு நாள் விண்ணப்பதாரர்களுக்கு கூரியர் சேவை மற்றும் சாதாரண விண்ணப்பதாரர்களுக்கு தபால் சேவை வசதிகள் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment