Ads (728x90)

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அதற்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிடும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் பேரவையின் பணிப்பாளர் நிஹால் சந்திரசிறி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் ஒடுக்குவதற்கு அரசாங்கத்திற்கோ அல்லது அதன் பங்குதாரர்களுக்கோ உரிமை இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சக்தி அமைச்சு அல்லது இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget