இதற்கமைய குறித்த காணி பகிர்ந்தளிப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க வட மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனடிப்படையில் குறித்த காணிகளில் நிலைக்கொண்டுள்ள இராணுவத்தினரையும், முகாம்களையும் அங்கிருந்து வேறு இடங்களுக்கு நகர்த்தி அந்த காணிகளை உரிய மக்களிடம் வழங்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுபாப்பு ஆலோசகர் மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, வலிகாமம் வடக்கில் சுமார் 2,300 ஏக்கருக்கு மேற்பட்ட தனியார் காணிகள் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள நிலையில் அதன் ஒரு பகுதி காணிகளை பாதுகாப்பு தரப்பு இவ்வாறு கையளிக்கவுள்ளது.
Post a Comment