Ads (728x90)

அரசாங்கத்தின் புதிய வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை துறைமுக தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்த போராட்டம் கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று முற்பகல் சுமார் 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

துறைமுக நுழைவாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு துறைமுகத்தின் பல தொழிற் சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக கொழும்பு துறைமுகத்தை அண்மித்த வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புதிய வரிக் கொள்கையை உடனடியாக மீளப் பெறாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய செயற்பாட்டினை முன்னெடுக்க நேரிடும் என துறைமுக ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget