Ads (728x90)

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் சகல விடயங்களும் அடங்கிய அதி விசேட வர்த்தமானி இவ்வாரத்துக்குள் வெளியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இம்முறை 58 அரசியல் கட்சிகள், 133 சுயேட்சைக் குழுக்கள் உட்பட நாடளாவிய ரீதியில் 80 ஆயிரம் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளார்கள். தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். 

தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வோம். நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அப்பாற்பட்டு எம்மால் செயற்பட முடியாது எனவும் தெரிவித்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget