இதேவேளை 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவது மிகவும் முக்கியமானது எனவும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரும், இலங்கை வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் உடனிருந்தார்.
தமது இந்த விஜயத்தின் பிரதான நோக்கம் இலங்கையுடனான ஒற்றுமையை வௌிப்படுத்துவதே எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment