வடக்கு-கிழக்கு மாகாணத்தில் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்படுகின்ற திணைக்களங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தினை எதிர்வரும் திங்கள் விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி சமர்ப்பிப்பார் என்றும் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு தமிழ்த் தரப்பினால் வழங்கப்பட்ட ஒருவார காலக்கெடு கடந்த 17ஆம் திகதி நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை திடீரென தமிழ்த் தரப்பினருடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது.
குறித்த அழைப்பானது சம்பந்தன், சுமந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு விடுக்கப்பட்டபோதும் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் மட்டுமே சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
ஜனாதிபதி செயலகத்தில் பிற்பகல் 3.30மணியளவில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்களான அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

Post a Comment