இக்கலந்துரையாடலில் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தி விளையாட்டு மற்றும் பொருளாதாரத்தில் ஈடுபடுத்தி ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்குதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது மண்டைதீவில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச விளையாட்டு மைதானத்தை கட்டும் பணிகளை மிக விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சர்வதேச விளையாட்டு மைதானத்திற்காக ஏற்கனவே 50 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் 100 ஏக்கர் வரை தேவைப்படுவதாகவும் அதனை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரஅமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திசாநாயக்க, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன, யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன், யாழ்.மாவட்ட பிரதம திட்டமிடல் பணிப்பாளர் நிக்கிளஸ்பிள்ளை மற்றும் வடமாகாண விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரம் சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment