Ads (728x90)

சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகள் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.

பதில் சீன தூதுவரினால் கொழும்பு துறைமுக வளாகத்தில் வைத்து சீருடை துணிகள் கல்வி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சீனா வழங்கிய சீருடை துணிகள் மாணவர்களுக்கு உடனடியாக வழங்கும் வகையில் அளவாக வெட்டப்பட்டு பொதியிடப்பட்டுள்ளது.

சீருடை துணிகளை எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிலுள்ள அரச பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி கற்கும் 41 இலட்சம் மாணவர்கள் மற்றும் பிக்கு மாணவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



4.24 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பாடசாலை சீருடைகள் 20 40 அடி கொள்கலன்கள் நாட்டை வந்தடைந்ததாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.


சீனாவினால் வழங்கப்பட்ட இச்சீருடைத் தொகுதி நேற்று கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


2023 ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான மாணவர்களின் தேவையில் 70மூ உள்ளடக்கத்தை முதல் தொகுதி உள்ளடக்கியதாக தூதரகம் தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget