சுற்றுலா இணையத்தளமான Travel Triangle இணையத்தளத்தினால் அண்மையில் வௌியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் நாட்டின் இயற்கை வளங்களின் அழகு காரணமாக பயணத்திற்கு ஏற்ற முதல் நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அழகிய கடற்கரைகள், வனவிலங்குகளால் நிறைந்த வன கட்டமைப்புகள், ரம்மியம் நிறைந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பனி மூடிய மலைத்தொடர்கள் என பல சுற்றுலா இடங்கள் தொடர்பான தகவல்களை வௌியிடும் இணையத்தளமாக Travel Triangle இணையத்தளம் காணப்படுகின்றது.
இலங்கையின் செழிப்பு மற்றும் பௌதீக பன்முகத்தன்மையைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் வியப்படைவதாக Travel Triangle இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சிவனொளி பாத மலையுச்சியில் இருந்து பார்க்கும் காட்சி சுவாரஷ்யமாக இருப்பதாகவும், ஒவ்வொருவரின் உடற்தகுதியைப் பொறுத்து 5 முதல் 6 மணித்தியாலங்களுக்குள் இந்த உலக பாரம்பரிய தளத்தில் ஏறலாம் எனவும் Travel Triangle இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
வாழ்வில் புத்துயிர் பெற வேண்டுமானால் இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் நிழலான இடத்தில் அமர்ந்து விட்டமின் D யை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் இலங்கை தொடர்பில் Travel Triangle இணையத்தளம் தகவல்களை பதிவு செய்துள்ளது.
Post a Comment