இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தொடர்ந்து மின் சேவையை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை மின்சார சபை சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை பாடசாலையூடாக 2 இலட்சத்து 78 196 பரீட்சார்த்திகளும், 53,513 தனியார் பரீட்சார்த்திகளுமாக 3 இலட்சத்து 31,709 பேர் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். அதற்கமைய, நாடளாவிய ரீதியில் 2,200 பரீட்சை நிலையங்களும், 317 ஒருங்கிணைப்பு நிலையங்களும், 32 பிராந்திய சேவை நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment