Ads (728x90)

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மாத்திரமே இதற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

applications.doenets.lk/exams என்ற இணையத்தளத்தில் போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி பரீட்சைக்கு 40 வயதிற்குட்பட்டோர் விண்ணப்பிக்க முடியும் எனவும்,  எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதியுடன் விண்ணப்பிப்பதற்கான காலம் நிறைவடையும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.





Post a Comment

Recent News

Recent Posts Widget