வாகன சாரதி அனுமதி பத்திரங்களுக்கு புள்ளி குறைப்பு மதிப்பீடு வழங்கும் முறை எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி போக்குவரத்து விதி மீறல்களை புரிகின்ற வாகன சாரதிகள் 24 புள்ளிகளை பெற்றால் அவரின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும். அவ்வாறு இரத்துச் செய்யப்பட்டதன் பின்னர் குறித்த சாரதி ஒரு வருட காலத்திற்கு அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment