Ads (728x90)

இந்த வருட இறுதிக்குள் நாட்டை ஸ்திரத்தன்மைக்கு இட்டுச் செல்ல அரசின் அனைத்து தரப்பினரும் ஒரே இயந்திரமாக செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி செயலக ஊழியர்களின் புத்தாண்டு உறுதிமொழி செய்யும் நிகழ்வில் வலியுறுத்தியுள்ளார்.

அரச உத்தியோகத்தர்கள் தமது பணியை வாரத்தில் எட்டு மணித்தியாலங்கள் அல்லது ஐந்து நாட்களுக்கு மட்டுப்படுத்தாது அர்ப்பணிப்புடன் செயற்பட்டு நாட்டை சாதாரண நிலைமைக்கு கொண்டுவர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய புதிய அமைப்பை உருவாக்க வேண்டும். கடந்த ஆண்டை விட அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதனை ஒரு இயந்திரமாக பார்க்கின்றோம்.

அவை அமைச்சுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிக்கப்படவில்லை. அவை ஒரு இயந்திரத்தின் உதிரி பாகங்கள். அந்த பாகங்களுக்கு இடையே போட்டியோ, இழுபறியோ இருக்க முடியாது.

அவர்கள் தங்கள் பொறுப்பை மட்டுப்படுத்த முடியாது. நாட்டின் அடிப்படைக் கொள்கைகளை அமுல்படுத்த அனைவரும் கடப்பட்டுள்ளனர். இதன் மையம் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை அலுவலகம் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget