Ads (728x90)

கடந்த 03 வருடங்களாக தாமதமாகி வரும் மினிப்பே இடதுகரை கால்வாய் புனரமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தி அடுத்த பெரும் போகத்திற்கு முன்னர் அதன் பயனை விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் பிற்பகல் மினிப்பே இடதுகரை கால்வாய் நிர்மாணப் பணியை பார்வையிட்ட போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

குறித்த பணிகளை பார்வையிட்ட ஜனாதிபதி, திட்டத்தின் செயற்பாடுகள் குறித்தும் பொறியியலாளர்களிடம் கேட்டறிந்தார். இத்திட்டத்தின் எதிர்காலப் பணிகளுக்கு இலங்கையிலுள்ள பொறியியல் பீட மாணவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

மினிப்பே அணைக்கட்டு புனரமைக்கப்பட்டதன் பின்னர் விவசாயிகளுக்கு தொடர்ந்து  நீரைப் பெற்றுக்கொடுக்க வாய்ப்பு ஏற்படுவதுடன், மினிப்பே இடது கரையின் இருபுறங்களிலும் உள்ள பயிர்ச்செய்கை நிலங்கள் சிறு மற்றும் பெரு போகங்கள் இரண்டிலும்  தடையின்றி விவசாயம் செய்ய முடியும். இதன் மூலம் 15,000 விவசாய குடும்பங்கள் பயனடைகின்றன.

இத்திட்டத்திற்கான செலவு 3,000 மில்லியன் ரூபாவாகும். சீனாவின் Gexhouba Group Company Limited நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

1948 இல் கட்டப்பட்ட மினிப்பே கால்வாய் கடைசியாக 1980 இல் புதுப்பிக்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 





Post a Comment

Recent News

Recent Posts Widget