Ads (728x90)

13வது திருத்தச் சட்டத்திற்கும் அப்பால் அதிகாரங்கள் தமிழ் மக்களுடன் பகிரப்படவேண்டும் என யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள பௌத்த பிக்குகள் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

பௌத்த பிக்குகள் குழு  யாழ்ப்பாணத்தில் இன்று காலை சர்வமத குழுவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சந்திப்பின் பின்னர் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர்.

பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது என ஜனாதிபதிக்கு நான்கு பிரதான பௌத்த பீடங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் பௌத்தப் பிக்குகளின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 ஆம் திருத்தத்திற்கு மேலான அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும் என பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளதாக யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget