ஒன்லைன் ஊடாக மாத்திரம் இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ள அவர், இதற்கான விண்ணப்பங்களை பெப்ரவரி 28 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை சமர்ப்பிக்க முடியுமெனவும் அறிவித்துள்ளார்.
இதற்கமைய ஒன்லைன் முறை மூலம் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk அல்லது onlineexams.gov.lk/eic ஊடாக விண்ணப்பிக்கலாமென திணைக்களம் அறிவித்துள்ளது.
அரசாங்க பாடசாலைகள் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள User Name மற்றும் Password மூலம் குறித்த இணையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் மேற்படி இணையத்தளத்தில் தங்களது தே.அ.அ. இலக்கம் உள்ளிட்ட விபரங்களை வழங்கி பதிவு செய்து கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதுடன் அதன் அச்சுப்பிரதியை பெற்று உரிய சந்தர்ப்பங்களில் சமர்ப்பிப்பதற்காக தம்வசம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment