பி.ப. 1.00 - பி.ப. 8.00 வரை குறித்த பகுதிக்குள் நுழைய தடை விதிக்குமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.
தேர்தலையும் நடத்துமாறு கோரி அரசாங்கத்தை வலியுறுத்தி, அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி இன்று பிற்பகல் கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளுக்குள் பிரவேசிக்க வேண்டாம் எனவும், பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளை மறிக்க வேண்டாம் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதில் இருந்தும், வன்முறைக்கு வழிவகுக்கும் எந்தச் செயலிலும் ஈடுபட கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது

Post a Comment