குறித்த ஆர்ப்பாட்ட பேரணி ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, காலி முகத்திடல் மற்றும் அது சாந்த வீதிகளுக்குள் இன்று பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையான காலப்பகுதிக்குள் பிரவேசிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோட்டை பொலிஸ் நிலையத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் காரணமாக புறக்கோட்டை ஒல்கெட் மாவத்தை முற்றாக மூடப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Post a Comment