நாட்டின் பிரதான மற்றும் பெரிய தொழிற்சங்கங்களான துறைமுக அதிகாரசபை, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகிய மூன்று நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் உட்பட கிட்டத்தட்ட 100 தொழிற்சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் போராட்டக்காரர்கள் திரண்டதையடுத்து புகையிரத நிலையத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளையும் பொலிசார் மூடியதோடு பொலிஸ்சார் ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேறுமாறு அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு சுமார் ஒரு மணி நேரம் மறியலில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.

Post a Comment