இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக வருகை தந்து யாழ்.பொது நூலகத்தில் பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சராக இலங்கைக்கு வருகைதந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். யாழ்ப்பாண மக்களை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தமை பெருமையாக கருதுகிறேன்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்தியா நன்கு அறிந்து வைத்துள்ளது. அதன் காரணமாகவே இலங்கையில் உள்ள இந்தியா தூதரகம் ஊடாக இலங்கை மக்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகமும் இங்கு வாழும் மக்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்கிய நிலையில் தொடர்ந்து உதவிகளை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment