தபால் மூல வாக்குச்சீட்டு விநியோகப் பணிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டமையை அடுத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்படுவதாக நேற்று முன்தினம் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதை இன்று நிராகரிப்பதற்கான வாய்ப்பு அரச அச்சக கூட்டுத்தாபனத்துக்கு இருக்கின்றது என்றால் நாளை ஜனாதிபதித் தேர்தலுக்கோ அல்லது பொதுத் தேர்தலுக்கோ உரிய வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணி நிராகரிக்கப்படுவதை எவ்வாறு தடுத்து நிறுத்தமுடியும்.
வருங்கால அரசாங்கம் போதியளவு நிதி இல்லை என கூறி பொதுத் தேர்தலையோ அல்லது ஜனாதிபதித் தேர்தலையோ தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்தால் என்ன நேரும்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டமைப்பு மற்றும் நடைமுறைகளுக்கு மத்தியில் அநாவசியமாக மேற்கொள்ளப்படுகின்ற இத்தகைய தலையீடுகள் மிகவும் ஆபத்தானவையாகும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் எச்சரித்துள்ளார்.
Post a Comment