Ads (728x90)

திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடரூந்து தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.விதானகே தெரிவித்துள்ளார்.

ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தொடரூந்து ஒழுங்குப்படுத்தல் சேவையாளர்கள், தொடருந்து நிலைய அதிபர்கள், இயந்திர சாரதிகள், தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புகையிரத சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்படுவதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரை குறித்த உத்தரவு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget