Ads (728x90)

இன்று  நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

அத்துடன் நாளை காலை 9 மணி முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மேலும் இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் பணி புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று முதல் துறைமுக அதிகாரசபை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள 48 மணி நேர சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட 4 மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய 5 மாகாணங்களில் இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினத்துக்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளைய தினம் சகல மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget