Ads (728x90)

உள்ளுராட்சிதேர்தலை நடத்துவதற்கு தடையாக உள்ள நிதிநெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு சில தரப்புகள் முன்வந்தால் அரசாங்கம் தேர்தலை நடத்த தயாரா? என பவ்ரல் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது

பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

எந்த சட்டரீதியான காரணங்களையும் முன்வைக்காமல் அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க முயல்கின்றது என அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் அரசாங்கம்  தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல் சீர்திருத்தத்தினை ஒரு கருவியாக பயன்படுத்த முயல்கின்றது. தற்போதைய எல்லை நிர்ணய செயற்பாடுகளின் மூலம் உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்த பின்னர் புதிய தேர்தல் முறை எவ்வாறானதாகயிருக்கும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget