Ads (728x90)

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.

ஊழல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற அடிப்படை பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் வொல்கர் டர்க் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை நம்புவதும், சிவில் சமூகம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் கண்காணிப்பு ஆகியவை முடிவுக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நிலைமாறுகால நீதிக்கான உண்மையான மற்றும் விரிவான அணுகுமுறையை ஆதரிக்க தனது அலுவலகம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget