இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இருபது மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 கிபி' எனும் திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்திய புராணங்களைத் தழுவி, அறிவியல் புனைவு கதை பாணியில் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் எதிர்வரும் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் புதிய முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் கதையின் நாயகர்களான பிரபாஸ் புஜ்ஜி எனும் வாகனத்தை இயக்கியும், கட்டளையும் இடும் பைரவா எனும் கதாபாத்திரத்திலும், அஸ்வத்தாமா எனும் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சனும், சுமதி என்னும் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும், றோக்ஷி எனும் கதாபாத்திரத்தில் திஷா படானியும் 'யாஸ்கின்' எனும் கதாபாத்திரத்தில் 'உலக நாயகன்' கமல்ஹாசனும் தோன்றுகிறார்கள்.
இவர்களது தோற்றம் வித்தியாசமாக இருப்பதுடன், காட்சிகள் மனித குலத்தின் இறுதிக்கட்டத்தின் சுவாரசியத்தை விறுவிறுப்பாக விவரிப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
Post a Comment