கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான 1,070 உறுதிப் பத்திரங்களை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை முதலில் வழங்கவுள்ளது.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 50,000 கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அதன்படி இந்த உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.
முதற்கட்டமாக மிஹிந்து சென்புர, சிறிசர உயன, மெத்சர உயன, லக்முத்து செவன, சிறிமுத்து உயன ஆகிய திட்டங்களை மையப்படுத்தி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது.
Post a Comment