தன்னை விடுதலை செய்வதாக அமெரிக்கா உத்தரவாதம் அளித்தால் அமெரிக்காவை உளவு பார்த்தது இராணுவ ரகசியங்களை வெளியிட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஜூலியன் அசஞ்சே ஒப்புக்கொண்டார்.
இந்த ஒப்பந்தம் ஏற்கப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் இரவு லண்டன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜூலியன் அசஞ்சே நேற்று அமெரிக்கா புறப்பட்டார்.
அமெரிக்காவின் பசுபிக் தீவுகள் பிராந்தியமான சைபன் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் ஜூலியன் அசஞ்சே மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை 3 மணிநேரம் நடைபெற்றது.
இதன்போது அமரிக்காவை உளவு பார்த்தது இராணுவ ரகசியங்களை கசியவிட்டது உள்ளிட்டவற்றை நீதிபதியின்முன் ஒப்புக்கொண்ட அசாஞ்சே அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே பேசுவதற்கான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தான் செய்தது எப்படி குற்றமாகும் என்று வாதிட்டார்.
விசாரணையின் இறுதியில் ஜூலியன் அசஞ்சே குற்றவாளிதான் என்று தீர்ப்பளித்த நீதிபதி ஏற்கனவே லண்டன் சிறையில் தண்டனைக் காலத்தை அனுபவித்ததால் அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
அவரை தொடர்ந்து தடுத்துவைப்பதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என நான் தொடர்ச்சியாக தெரிவித்து வந்துள்ளேன். நாங்கள் பதவியேற்ற பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக எங்கள் அரசாங்கம் இந்த விடயத்திற்கு தீர்வை காண்பதற்காக பல மட்டங்களில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது என அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
Post a Comment