Ads (728x90)

கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட  அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.

அதிபர்கள், ஆசிரியர்களின் பங்குபற்றுதலுடன் இன்று முற்பகல் 11 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. எனினும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் பொலிஸாரின் தடைகளையும் மீறி ஜனாதிபதி செயலகம் நோக்கி சென்ற போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

சம்பள முரண்பாடுகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக குறைந்தது 10,026 அரச பாடசாலைகள் இன்று மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினைகள், விடைத்தாள் திருத்தும் பணிக்கான கட்டணங்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget