குறிப்பாக இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அதிகளவான மரணங்களும் பதிவாகியுள்ளன. முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் 9 மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 6 மணி வரை அந்த எண்ணிக்கை 16ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் நிலம் நிரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கும் முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று திங்கட்கிழமை கொலன்னாவ, களனி, அம்பத்தளை ஆகிய பிரதேசங்களுக்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார். கொலன்னாவை சேதாவத்த வெஹெரகொட ரஜமஹா விகாரையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
Post a Comment