Ads (728x90)

இலங்கை மகளிர் அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 160 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

துடுப்பாட்டத்தில் அணித்தலைவி சமரி அத்தபத்து 91 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். நீலக்ஷிகா சில்வா 63 ஓட்டங்களையும், அனுஷ்கா சஞ்சீவனி 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த நிலையில் 276 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 34.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

இதற்கமைய மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 160 ஓட்டங்களால் இமாலய வெற்றியை பதிவு செய்து தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

16 வருடங்களுக்கு பின்னர் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான தொடர் ஒன்றை இலங்கை அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget