Ads (728x90)

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று ரி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகின்றது.

அதன்படி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 43 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அதிரடியாக ஆடியது. 20 ஓவர்கள0ல் இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களை குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 58 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் மதீஷா பதிரனா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 214 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் புகுந்தது. இலங்கையின் தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் களம் புகுந்தனர். இருவரும் இந்தியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.

இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 84 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் குசல் மெண்டிஸ் 45 ஓட்டங்களில்ஆட்டம் இழந்தார். மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிசாங்கா அரைசதம் அடித்த நிலையில் 79 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் புகுந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் இலங்கை அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்களில் தோல்வி அடைந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ரி20 போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget