கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு நான் மேற்கொண்ட விஜயத்தின் போது வடக்கு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தாம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை என்னிடம் முன்வைத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்த வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பினர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த பட்டதாரிகள் கொண்டுள்ள தகைமையின் பிரகாரம் அரசாங்கத்தின் அத்தியாவசிய வெற்றிடங்களுக்கு ஏன் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதில்லை என கேள்வி எழுப்புகிறேன்.
வடக்கு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் முன்வைத்த கோரிக்கைகளை சபையில் சமர்ப்பிர்க்கிறேன். இது குறித்து ஆராய்ந்து அரசாங்கத்தின் கொள்கையை தெரிவியுங்கள்.
நாட்டில் கிட்டத்தட்ட 50,000 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதால் அவர்களுக்கும் உரிய தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
Post a Comment