Ads (728x90)

பிரியங்கா மோகன் நடிக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரியங்கா மோகன் இப்படத்தில் பெண் காவல் அதிகாரியாக, சாருலதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் படத்தின் முதல் பாடலான 'கரம் கரம்' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் அடுத்தடுத்து புதுப்புது கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவரது முந்தைய படங்களான 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா' திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது.

விவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு 'சரிபோத சனிவாரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் 'சூர்யாவின் சனிக்கிழமை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிரியங்கா மோகன் நடிக்கிறார். 

ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 29ம் திகதி வெளியாகவிருக்கிறது.


Post a Comment

Recent News

Recent Posts Widget