Ads (728x90)

இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்றைய பாராளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கடந்த ஜூலை 02 ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டிருந்தார்.

திருகோணமலை திரியாயைப் பிறப்பிடமாகக் கொண்ட குகதாசன், நீண்ட காலம் கனடாவில் வசித்து வந்தார். 2020 முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவராகப் பணியாற்றுகிறார். 2020 பாராளுமன்றத் தேர்தலில் குகதாசன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 16,770 வாக்குகளைப் பெற்றிருந்தார். 

இத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு உறுப்பினரையே தமிழரசுக் கட்சி பெற்றது. இரா.சம்பந்தனுக்கு அடுத்து அதிக வாக்குகளை பெற்ற அடிப்படையில் இவர் சம்பந்தனின் மறைவை அடுத்து பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget