Ads (728x90)

அடுத்த வாரம் சர்வதேச உச்சிமாநாடு தைவானில் நடைபெறவுள்ளது. இதில் 25 க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் பொலிவியா, கொலம்பியா, சுலோவேக்கியா உள்பட 6 நாடுகளுக்கு சீனா ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் தைவான் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என சீனா தரப்பில் பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949 ஆம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தனது நாட்டின் ஒரு அங்கம் என கருதும் சீனா அதனை மீண்டும் இணைத்துக்கொள்ள துடிக்கிறது. 

இதனால் தைவான் எல்லையில் போர்க்கப்பல்களை அனுப்பி சீனா பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் வேறு எந்த நாடுகளும் தைவானுடன் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget