Ads (728x90)

நாட்டில் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் மேம்படுத்துவதற்கு மரங்களை நடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று பிரிட்டனில் அரசியல்வாதிகளுக்கு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிக மரங்களை நடுவதால் மக்களுக்கு ஆரோக்கியமான இயற்கை சூழல் உருவாகும் என்றும், சுகாதாரத்துறைக்கான நிதிச்சுமை குறைவதற்கு உதவும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் மரங்களை நடுவதால் இத்தகைய பல நன்மைகள் கிடைப்பதாகவும், சூழல் மாசடைவதை தடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் மிகுந்த அக்கறைகொள்ள வேண்டும் என்றும், காலநிலை மாற்றத்தின் அதிக விளைவுகளுக்கான தூய்மையான, பசுமையான உலகத்தின் சாத்தியமான உயிரைக் காக்கும் நன்மைகளை இந்த இயற்கை சூழல் பராமரிப்பு அங்கீகரிக்கிறது என்று உட்லண்ட் என்னும் அமைப்பின் தலைமை அதிகாரியான வைத்தியர் டெரன் மூர்க்ரொப்ட் தெரிவித்துள்ளார்.

மரங்களும், தாவரங்களும் நம்மை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைக்கின்றன. அவை காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்த்து போராடுகின்றன. நமது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துகின்றன. மாசுபாட்டைக் குறைக்கின்றன.

இயற்கை மற்றும் நமது கிரகத்தை பாதுகாக்கின்றன. அதனால்தான் நாங்கள் எங்களது அதிக மரம் நாட்டும் காலநிலை பிரசாரத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களை கோருகிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget