Ads (728x90)

'அரகலய' போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள் இணைந்து உருவாக்கிய மக்கள் போராட்ட முன்னணியின் சார்பில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வேட்பாளர் ஒருவர் களமிறங்கவுள்ள நிலையில், அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் நாளை புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியை அடுத்து கொழும்பு, காலிமுகத்திடலைத் தளமாகக் கொண்டு நாடளாவிய ரீதியில் எழுச்சியடைந்த 'அரகலய' எனப்படும் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய மக்கள் போராட்ட முன்னணியின் சார்பில் சட்டத்தரணியும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான நுவன் போபகே வேட்பாளராகக் களமிறங்கவுள்ளார். 

2022 ஆம் ஆண்டு நாடு முகங்கொடுக்க நேர்ந்த பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்களும், அதற்கு உடந்தையாக செயற்பட்டவர்களும் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறங்கும் நிலையில், அதற்கு முற்றிலும் எதிரான மக்கள்மையக் கொள்கையுடனேயே நாம் இத்தேர்தலில் போட்டியிடவுள்ளோம் என நுவன் போபகே தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி 'நாட்டின் அரச கட்டமைப்பை முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் என்பதே எமது பிரதான எதிர்பார்ப்பாகும். அதேபோன்று மக்களை மையப்படுத்திய அரசியலமைப்பை உருவாக்கி, மக்களுக்கான ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்கும் உத்தேசித்திருக்கிறோம். 

அத்தோடு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதாக உத்தரவாதமளித்து சகல அரசாங்கங்களும் ஏமாற்றிக் கொண்டிருக்கையில், நாம் அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை வழங்குவோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget