கடந்த 28ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற முடியவில்லை.
எனவே முதல் இரண்டு இடத்தைப் பிடித்த மசூத் பெசெஷ்கியான், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சயீத் ஜலிலி ஆகிய இருவரையும் முன்னிறுத்தி நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
இதில் பெசெஷ்கியன் 17 மில்லியனுக்கும் அதிகமான 53.3 சதவீத வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
இருதய சத்திரசிகிச்சை நிபுணரான இவர், ஈரானின் முன்னாள் சுகாதார அமைச்சராக செயற்பட்டவர்.
இவருடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சயீத் ஜலிலியும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதை அடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது.
Post a Comment