Ads (728x90)

2024 ஆண்டுக்கான T20 மகளிர் உலகக் கிண்ணத்தொடர் பங்களாதேஷில் நடத்த ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும், அதனை சர்வதேச கிரிக்கெட் வாரியம் அங்கே நிலவிய அரசியல் நிலைமைகள் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றியது.

அதன்படி ஐக்கிய அரபு இராச்சியத்தில் T20 மகளிர் உலகக் கிண்ணத் தொடர், ஒக்டோபர் 3 தொடக்கம் 20ஆம் திகதி வரை ஷார்ஜா, துபாய் ஆகிய இடங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் திருத்தியமைக்கப்பட்ட போட்டி அட்டவணைக்கு அமைய மகளிர் T20 உலகக் கிண்ணத்தொடரின் முதல் போட்டி, பங்களாதேஷிற்கும் – ஸ்கொட்லாந்திற்கும் இடையே ஷார்ஜாவில் ஒக்டோபர் 03ஆம் திகதி நடைபெறுகின்றது.

இலங்கை மகளிர் அணி தமது முதல் போட்டியில் பாகிஸ்தானை முதல் நாளிலேயே எதிர்கொள்கின்றது. இறுதிப்போட்டி ஒக்டோபர் 20ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ளது. மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்குபற்றுகின்றன. 

குழு A பிரிவில் அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கையும், குழு B பிரிவில் பங்களாதேஷ், தென்னாபிரிக்கா, மேற்கிந்தியதீவுகள், ஸ்கொட்லாந்து, இங்கிலாந்தும் மோதவுள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget