சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் கங்குவா. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் பயர் பாடல் வெளியிடப்பட்டது. சரித்திரம் கலந்த பேண்டஸி படமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியிருக்கும் கங்குவா படத்தின் முதல் பாகம் அக்டோபர் பத்தாம் தேதி ஆயுத பூஜைக்கு திரைக்கு வருகிறது.
350 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உட்பட பத்து மொழிகளில் வெளியாகிறது.
Post a Comment