Ads (728x90)

உள்ளூராட்சி தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் விட்டதன் மூலம் ஜனாதிபதியும், தேர்தல் ஆணைக்குழுவும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், விரைவில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தவேண்டுமெனவும் தேர்தல் ஆணைக்குழுவை பணித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை நடத்தாததால் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பொன்றை வழங்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கை மையம் மற்றும் பெப்ரல் நிறுவனம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பினை வழங்கிய உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

தலைமை நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் யசந்த கோதாகொட ஆகிய ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget