Ads (728x90)

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான 30ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் அணி திரண்டு ஆதரவு வழங்குமாறு வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வடக்கில் யாழ்ப்பாணத்திலும், கிழக்கில் திருகோணமலையிலும் காலை 10 மணியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளோம் என தெரிவித்துள்ளார்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடகிழக்கு மாகாண சங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதி இடம்பெறவுள்ள குறித்த நிகழ்விற்கு ஆதரவு வழங்குமாறு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget