Ads (728x90)

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுவை ஒடுக்கும் அரசாங்கத்தை உருவாக்குவேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று நீர்கொழும்பில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

எங்கள் நாட்டில் போதைப்பொருளும், பாதாள உலகமும் ஒன்றாகவே உள்ளது. இலங்கை அதன் தொலைதூர வரலாற்றில் ஒருபோதும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைக் கொண்டிருக்கவில்லை. குற்றங்கள் நடந்தன. ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் எதுவும் இல்லை.

ஆனால் இப்போது குற்றங்கள் எப்படி இருக்கின்றன? இப்போது துபாயிலிருந்து கொலைகளை இயக்கலாம். சிறையில் அமர்ந்து போதைப்பொருள் வியாபாரம் செய்யலாம். அதாவது தற்போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமே இடம்பெறுகின்றன.

இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் ஜனாதிபதிகளின் கைகளில் வளர்ந்தன. ஊழல் உள்ளூர் அரசியல்வாதிகளால் செய்யப்பட்டது.

எனவே இந்த போதைக்கும், இந்த பாதாள உலகத்திற்கும், அரசியலுக்கும் தொடர்பு உள்ளது. எனவே நினைவில் கொள்ளுங்கள் இந்த போதைப்பொருளையும், பாதாள உலகத்தையும் அடக்கும் அரசாங்கத்தை உருவாக்கும் அந்த அரசுதான் தேசிய மக்கள் சக்தி அரசு என தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget