வாழ்க்கைச் சுமையைக் குறைத்தல், தொழில் வாய்ப்புகளை வழங்குதல், வரி நிவாரணம் வழங்குதல், பொருளாதார மேம்பாடு மற்றும் 'உறுமய' மற்றும் 'அஸ்வெசும' வேலைத் திட்டங்களை செயல்படுத்தல், முதல் கட்டமாக, 100,000 தொழில் வாய்ப்பு, வருமான மூலங்களை வழங்க நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றுக்கு ஐந்தாண்டுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளார்.
“தேரவாத வர்த்தகப் பொருளாதாரம், 2025இற்கு அப்பால் செல்லும் செயல்முறை, ஒளிமயமான சமுதாயத்தை நோக்கி, வெற்றிபெறும் தாய்நாடு, ஒன்றிணைந்த இலங்கை" ஆகிய 05 பிரதான கூறுகளை இந்த தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளடக்கியுள்ளது.
எனது திட்டம் அத்தியாவசிய பொருட்களின் மீதான வரிகளை நீக்கி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும். அதே சமயம் நமக்குத் தேவையானதை இறக்குமதி செய்யவும் வாய்ப்பளிக்கும்.
புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும், இதனால் தொழில் சந்தை விரிவடையும். இது தவிர புதிய வருமானம் ஈட்டும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
பாடசாலைக் கல்வியை முடித்து வெளியேறும் 50,000 பிள்ளைகளுக்கு கைத்தொழில் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும்.
எதிர்காலத்தில் தொழில் வல்லுநர்களுக்கு வரியில்லா சேவை சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மறைமுக வரிகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். இந்த வரிகளை படிப்படியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த இரண்டு பணிகளையும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தி, வரி செலுத்துவோருக்கு வரிச் சலுகை வழங்கப்படும்.
எனது திட்டம் முதலீட்டுக்கு உகந்தது, அதாவது சிறந்த சுகாதாரம், கல்வி மற்றும் மேலதிக பயிற்சி போன்ற நமக்குத் தேவையான சேவைகளைப் பெற முடியும். நமது பொருளாதார முன்னேற்றம் நிலையான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட எதிர்காலத்தை உருவாக்கும். உறுமய மற்றும் அஸ்வெசும திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.
2025ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கருதி அனைத்து அரச ஊழியர்களுக்கும் வாழ்க்கைச்செலவு கொடுப்பனவாக மாதாந்தம் 25,000 ரூபா வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச சேவையின் குறைந்தபட்ச ஆரம்ப சம்பளம் 24% ஆகவும், வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுடன் மொத்த சம்பளம் 55,000 ரூபாவாகவும் ஏனைய அனைத்து பதவிகளுக்கான அடிப்படைச் சம்பளமும் மாற்றியமைக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment