இந்நிறுவனம் ஆண்டுதோறும் புதிய வகை செல்போன் மாடல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் 4 ஆகிய சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் இன்று வெளியிட்டது.
கலிபோர்னியாவில் உள்ள குபெர்டினோவில் உள்ள Apple Park இல் இன்று நடைபெற்ற வருடாந்த நிகழ்வில் அப்பிள் நிறுவனம் தனது சமீபத்திய தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஐபோன் 16 செயற்கை நுண்ணறிவை (AI) மனதில் வைத்து உருவாக்கப்பட்ட முதல் ஆப்பிள் தயாரிப்பாகும். ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் செயற்கை நுண்ணறிவை (AI) இணைக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 16 மாடல்களை அறிமுகம் செய்தாலும், இந்தியாவில் இருந்து தான் ஐபோன் 16 மாடல்கள் மொத்தமாக தயாரிக்கப்பட்டு உலகம் முழுக்க விற்பனைக்காக அனுப்பப்படவுள்ளது.
Post a Comment