Ads (728x90)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

மனித உரிமைகள் பேரவையில் ஐரோப்பிய ஒன்றியம் நேற்று தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்வதாகவும், இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை தொடர்பில் பிரித்தானியாவும் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மெசிடோனியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைமையிலான குழுவும் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget