Ads (728x90)

ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அப்துல்மஜித் டெபோன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அப்துல்மஜித் டெபோன் 94.7 சதவீத வாக்குகளைப் பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இவரை எதிர்த்து போட்டியிட்ட இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த அப்துல் ஹசானி 3.2 சதவீத வாக்குகளையும், சோசலிஸ்ட் அமைப்பை சேர்ந்த யூசுப் 2.2 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்துள்ளனர்.

தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ள போதிலும் டெபோன் வெற்றியை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. 

78 வயதான டெபோன் 2019 ஆண்டு முதல் அந்நாட்டில் அதிபராக இருந்து வருகிறார். எண்ணைய் வளம் கொண்ட அல்ஜீரியாவில் இராணுவ அமைச்சர் பொறுப்பையும் அவரே தம்வசம் வைத்துள்ளார்.

இந்த முறை நடைபெற்ற தேர்தலில் மொத்த வாக்குளில் 40 சதவீதம் மட்டுமே பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget